தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’திமுகவில் இருந்து அதிமுகவிற்கு வருபவர்களை வரவேற்போம்’ - அமைச்சர் செல்லூர் ராஜு - குடிமராமத்து பணி

மதுரை : திமுகவிலிருந்து அதிமுகவிற்கு யார் வந்தாலும் அவர்களை வரவேற்போம் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செல்லூர் ராஜு
அமைச்சர் செல்லூர் ராஜு

By

Published : Aug 10, 2020, 3:22 PM IST

மதுரை மாவட்டம், பரவை பேரூராட்சி கண்மாய் பகுதியில் 90 லட்சம் ரூபாய் மதிப்பில் நடைபெறும் குடிமராமத்துப் பணிகளை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“கண்மாய் நீர்பிடிப்புப் பகுதியில் ஏதேனும் ஆக்கிரமிப்பு இருந்தால் அகற்றப்படும். கடந்த ஆண்டு மழை நன்றாக பெய்ததால் மதுரையில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது. ஆயிரத்து 428 கோடி ரூபாய் ஒதுக்கி நீர்நிலைகள் மேம்படுத்தப்படுகின்றன. இது மதுரை, ராமநாதபுரம் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமையும்.

முல்லைப் பெரியாறு, வைகை அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கண்மாய்கள், குளம், ஏரி ஆகியவற்றில் நிரம்பும் நீரை சேமித்து நீர்த் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதுரை வைகையாற்றில் 17 கோடி ரூபாய் மதிப்பில் கொடிமங்கலம் பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டு, விவசாயிகள் பாசன வசதி பெற நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்றார்.

திமுகவிலிருந்து அதிமுகவிற்கு வருபவர்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “திமுக, ஒரு குடும்பக்கட்சி. வாரிசு அடிப்படையில் செயலடுகிறது. திறமை இல்லாத மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக உள்ளார். அவரைத் தவிர கட்சியில் வேறு யாரும் தலையிட மாட்டார்கள் என்கிறார் ஸ்டாலின். திமுகவினரிடையே ஒற்றுமையில்லை.

முக.ஸ்டாலின் மகன் உதயநிதி தற்போது கட்சியில் வளர்ந்து வருகிறார். கு.க.செல்வம் திமுகவிலிருந்து பாஜகவிற்கு சென்றது அவரது நிலைப்பாடு. எங்களது கருத்தை ஏற்று அதிமுகவிற்கு திமுகவினர் யார் வந்தாலும் வரவேற்போம். பாஜக நயினார் நாகேந்திரன் அதிமுகவிற்கு வந்தால் வரவேற்போம். சசிகலா வந்தாலும் அதிமுக மிகப் பெரிய வலுபெறும்.

தகவல் தொழில்நுட்ப பிரிவு நன்றாகச் செயல்பட்டு வருகிறது. சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளில் அதிமுக புயல் வேகத்தில் செயல்பட்டு வருகிறது. இருபெரும் தலைவர்களான இபிஎஸ் - ஓபிஎஸ் ஆகியோரின் தலைமையில் கட்சி நடைபெறும். அதில் மாற்றுக் கருத்தே இல்லை.

அமைச்சர் செல்லூர் ராஜு பேசிய காணொலி

சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூடி யாரை முதல்வர் என்கிறார்களோ அவரே தமிழ்நாட்டின் முதலமைச்சர். இந்தியாவுக்கே வழிகாட்டியாக தமிழ்நாடு, கரோனா பாதுகாப்புப் பணியில் சிறப்பாக செயல்படுகிறது” என்றார்.

இதையும் படிங்க:மக்கள் ஒத்துழைக்காவிடில் ஊரடங்கு தவிர்க்க இயலாததாக மாறி விடும் - அமைச்சர் செல்லூர் ராஜு

ABOUT THE AUTHOR

...view details