தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கூட்டுறவு வங்கிகளில் தவறு செய்தால் யாரும் தப்பிக்க முடியாது' - அமைச்சர் செல்லூர் ராஜூ எச்சரிக்கை - மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை: தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளில் யார் தவறு செய்தாலும் கட்சி, சாதி என எந்த வேறுபாடும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Minister Sellur Raju Press Meet in Madurai
Minister Sellur Raju Press Meet in Madurai

By

Published : Aug 24, 2020, 2:07 PM IST

மதுரை பழங்காநத்தம் பகுதியில் ரூ.1.50 கோடி மதிப்பில் மதுரை மாவட்ட கூட்டுறவுத்துறையின் ஒருங்கிணைந்த கூட்டுறவு அலுவலக வளாகத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''கூட்டுறவு வங்கிகள் முழுவதும் இன்னும் ஒரு மாதத்தில் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்படவுள்ளது. வங்கிகள் மூலம் மகளிர் குழுக்களுக்கு, சிறு வணிகர்களுக்கு கடன் கொடுக்கப்பட்டு வருகிறது. 28 ஆயிரம் கோடியிலிருந்து 58 ஆயிரம் கோடி அளவிற்கு கூட்டுறவு வங்கி முதலீடாக பெற்றுள்ளது. அதிக அளவிலான பொதுமக்கள் கூட்டுறவு வங்கிகளை நம்புகிறார்கள். மிகவும் குறைந்த வட்டி விகிதத்தில் நகைக் கடன்கள் வழங்கப்படுகின்றன.

ஒருங்கிணைந்த கூட்டுறவு அலுவலக வளாகத்தைத் திறந்து வைத்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ

கூட்டுறவுத் துறையில் எந்தவிதமான தவறும் நடக்கக் கூடாது. தவறு செய்தால் யாரும் தப்பிக்க முடியாது. கட்சி, சாதி என எந்த வேறுபாடின்றி யார் தவறு செய்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சமீபத்தில் ஆவினில் நடந்த மிகப்பெரிய முறைகேட்டினைக் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நானாக இருந்தாலும் தவறு செய்தால் தப்பிக்க இயலாது.

அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர் சந்திப்பு

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்துக் கூட்டுறவு வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் விதிமுறைக்கு உட்பட்டே செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத்தை எதிர்த்து இந்தியாவிலேயே நீதிமன்றத்தை நாடிய ஒரே அரசு தமிழ்நாடு அரசு மட்டும் தான்'' என்றார்.

இதையும் படிங்க:கனிமொழியை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்ற தமிழ் தெரிந்த அலுவலர்கள்!

ABOUT THE AUTHOR

...view details