அப்போது பேசிய அவர், “வைகை அணையிலிருந்து 2020 - 2021ஆம் ஆண்டிற்கான பெரியார் பாசன பகுதியில் ஒரு போக பாசனத்திற்கு சுமார் 1,05,002 ஏக்கர் நிலங்களுக்கு 1130 கன அடி தண்ணீர் இன்று (செப் 27) முதல் 120 நாள்கள் திறக்கப்பட்டன.
மேலும், ஒரு போக விவசாயிகள் சிறப்பான முறையில் விவசாயம் செய்ய பெரியாறு பாசன கால்வாய், திருமங்கலம் பிரதான கால்வாயிலிருந்து 120 நாள்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் நடமாடும் நியாயவிலைக் கடைகள் தொடங்கப்படும். மதுரையிலும் அது விரைவில் தொடங்கிவைக்கப்படும்.
இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும்தான் விலையில்லா ரேஷன் பொருள்கள் வழங்கப்படுகின்றன. மலை பகுதிகளில் வாழும் மக்களுக்கு நேரில் சென்று வழங்குகிறோம். 3000 நகரும் ரேஷன் கடைகள் இயக்கப்படுகின்றன. சென்னை நகர மக்கள் முதல், கிராமங்கள்வரை நகரும் ரேஷன் கடைகள் செயல்படுகின்றன.