தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுகவை பிராண்டுவதிலேயே குறியாக இருக்கும் ஸ்டாலின்  - செல்லூர் ராஜூ கலாய் - ஸ்டாலினை நகைச்சுவையாக விமர்சித் செல்லூர் ராஜு

மதுரை: திமுக தலைவர் அதிமுகவை பிராண்டுவதிலேயே குறியாக இருக்கிறார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ நகைச்சுவையாக ஸ்டாலினை கலாய்த்துள்ளார்.

minister sellur raju

By

Published : Nov 15, 2019, 2:35 PM IST

Updated : Nov 15, 2019, 3:58 PM IST

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான 2019 மேயர், மாமன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பமனு பெறும் நிகழ்வு மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டு வேட்பாளர்களின் விருப்ப மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுகவை பிராண்டுவதிலேயே குறியாக இருக்கிறார் என நகைச்சுவையாக சைகையின் மூலம் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசுகையில், "ஸ்டாலின் பல திட்டங்களைப் போட்டுப்பார்த்தார், எதுவும் பலிக்கவில்லை. அதனால் கோபத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டார். உள்ளாட்சித் துறையில் நிர்வாக ரீதியாக செயலாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, வேறு எந்தக் காரணம் இல்லை.

எங்களைப் பிராண்டுவதில்தான் குறி

ஐஐடி மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்பதை முதலமைச்சர்தான் முடிவெடுக்க வேண்டும்" என்றார்.

Last Updated : Nov 15, 2019, 3:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details