மதுரை மாவட்டம் தே. கல்லுப்பட்டி ஒன்றியம், எம். சுப்புலாபுரம் கிராமத்தில் ஐந்தாயிரம் நபர்களுக்கு ஐந்து கிலோ அரிசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கிவைத்தார்.
பின்னர் அமைச்சர் மக்களிடையே பேசியதாவது:
தமிழ்நாட்டில் கரோனாவைக் கட்டுப்படுத்த முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர். மூன்றாயிரத்து 780 கோடியை கரோனா நிவாரணமாக ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்பே முதலமைச்சர் அறிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மத்திய அரசிடமிருந்து வாங்கவேண்டிய அரிசி தொகுப்பினை அழுத்தம் கொடுத்து வாங்கியுள்ளார். இதனால் குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டு மடங்குகளாக அரிசி வழங்கப்படும்.