தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் - பேரிடர் மேலாண்மைத் துறை

தமிழ்நாடு வருவாய், பேரிடர் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரையில் இன்று (ஏப்.9) தனது முதல் கரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார்.

கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அமைச்சர் ஆர் பி உதயகுமார்
கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அமைச்சர் ஆர் பி உதயகுமார்

By

Published : Apr 9, 2021, 4:36 PM IST

தமிழ்நாடு வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் உள்ள தடுப்பூசி மையத்தில் முதல் கட்டமாக கரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டார்.

அங்கு அவருக்கு கோவாக்ஷின் (Covaccine) தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி எடுத்துக் கொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், ’’கரோனா முதல் அலையை தமிழ்நாடு அரசு சிறப்பாகச் செயல்பட்டு பரவலைத் தடுத்தது. தற்போது, 2ஆம் ஆலை வந்துள்ளது. இதிலிருந்து மக்களைக் காக்க அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

அதுமட்டுமல்லாமல், பொதுமக்கள் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். மதுரை மாவட்டத்தில் அரசு இராஜாஜி மருத்துவமனையில் 25 ஆயிரத்து 46 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 525 பேரும் தடுப்பூசி எடுத்துக் கொண்டனர்’’ என்று கூறினார்.

இதையும் படிங்க: கர்ணனுக்கு குவியும் பாராட்டுகள்

ABOUT THE AUTHOR

...view details