கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அம்மா அறக்கட்டளை சார்பில் உணவு வழங்கப்பட்டுவருகிறது அதன் ஐம்பதாவது நாளான இன்று, அமைச்சர் ஆர் பி உதயகுமார் பணிகளை பார்வையிட்டார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கையின்படியே அதிமுக அரசு செயல்பட்டுவருகிறது. தமிழ் மொழிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் அதன் செழுமைக்கு அதிமுக என்றும் பாடுபடும்.
மதுரை இரண்டாவது தலைநகர் என்ற எங்களது கருத்தை நாங்கள் பதிவு செய்துள்ளோம். இதுகுறித்து முதலமைச்சர் முடிவெடுத்து அறிவிப்பார். அமைச்சர் பதவியை விட மதுரை இரண்டாம் தலைநகர் என்ற எனது கோரிக்கைக்கு நான் முக்கியத்துவம் அளிப்பேன்.