தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘எங்களைப் போல் வெட்க மானம் பார்க்காமல் இருங்கள்’ - சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு அமைச்சர் அறிவுரை - சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு அமைச்சர் சொன்ன அறிவுரை

மதுரை: வாக்காளர்கள் எவ்வளவு திட்டினாலும் வெட்கம், மானம் பார்க்காமல் ஓட்டு கேட்பதைப் போல் வாகன ஓட்டுநர்கள் எவ்வளவு திட்டினாலும் சுங்கச்சாவடி ஊழியர்களும் நிதானத்தைக் கடைபிடியுங்கள் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அறிவுரை கூறியுள்ளார்.

Minister R.B. Uthayakumar advises Customs staff
”எங்களைப் போல வெட்க மானத்தை பார்க்காமல் இருங்கள்” - சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு அமைச்சர் அறிவுரை!

By

Published : Feb 9, 2020, 4:34 PM IST

கப்பலூர் தொழிற்பேட்டை அரங்கத்தில் நடைபெற்ற சுங்கச்சாவடி ஊழியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் நிகழ்வில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அமைச்சர் ஆர்.பி உதயகுமார், “திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடியில் அடிக்கடி ஏற்படும் பிரச்னைக்கு நான்தான் காரணம் என சிலர் வதந்தி பரப்புகிறார்கள். இதனால் எனக்கு வரக்கூடிய வாக்குகள் பாதிக்கப்படுகிறது. குழந்தைக்கு தாய் ஊட்டும் உணவு போல் முறையான விதிமுறைகளைப் பின்பற்றி வாகன ஓட்டிகளிடம் அன்புடனும் பணிவுடனும் பாசத்துடனும் பேச வேண்டும். மாற்றான் தாய்மனப்பான்மையோடு வாகன ஓட்டிகளைப் பார்க்கக்கூடாது.

அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேச்சு

எங்களைப் போல உலகத்தில் யாருமே அவமானப்படுவதில்லை. தேர்தல் சமயங்களில் நாங்கள் வாக்குக் கேட்டு செல்லும்போது பாதிப்பேர் கோபத்துடன்தான் எங்களை அணுகுவர். பதிலுக்கு நாங்கள் கோபப்பட்டால் வாக்கு போய்விடும் பொறுமையோடு கடப்போம். ஒரு ஓட்டு போட வைக்க நாங்கள் என்ன பாடுபடுகிறோம் தெரியுமா? எளிதில் அமைச்சராக வந்து விட முடியாது. எவ்வளவு கோபப்பட்டாலும் திட்டினாலும் மானம், வெட்கம், ரோசம் எல்லாவற்றையும் மனதுக்குள் அடக்கிக் கொண்டு ஓ.ஏ.பி வாங்கவும் பட்டா வாங்கவும் என்னிடம் வருவீர்களே அப்பொழுது பார்த்துக்கொள்கிறேன் என சிரித்துக்கொண்டே வாக்குக் கேட்போம். அதில் சில நல்ல உள்ளங்களும் எங்களை வரவேற்று ஆதரிப்பார்கள். அந்த வரவேற்பில் நாங்கள் பட்ட கஷ்டங்களை எல்லாம் மறந்து மகிழ்ச்சியோடு செல்வோம். உரிய விதிமுறைகளைப் பின்பற்றி வாகன ஓட்டிகளிடம் மென்மையாக பழகினாலே பொதுமக்களால் எந்த சிக்கலும் ஏற்படாது” என்றார்.

இதையும் படிங்க: மீனாட்சி திருக்கோயிலில் தைப்பூசத் தெப்பத் திருவிழா: மதுரை கோலாகலம்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details