தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சாமானியரான எடப்பாடியை இந்தத் தேர்தல் மீண்டும் முதலமைச்சராக்கும்' - வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

மதுரை: சாமானியரான எடப்பாடி பழனிசாமியை, மீண்டும் இந்தத் தேர்தல் முதலமைச்சராக அமரவைக்கும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நம்பிக்கைத் தெரிவித்தார்.

This election will make the common man Edappadi Palanisamy to the CM said minister udyakumar
This election will make the common man Edappadi Palanisamy to the CM said minister udyakumar

By

Published : Apr 6, 2021, 12:09 PM IST

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியிலுள்ள டி. குன்னத்தூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "அமைதி, வளம், வளர்ச்சி, எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும். இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்ற தாரக மந்திரத்துடன், அதிமுக ஆட்சி செய்தது.

ஆர்.பி. உதயகுமார்

சாதி, மதம், ஊர் சண்டை என எதுவும் இல்லாமல் அமைதிப் பூங்காவாகத் தமிழ்நாட்டை மாற்றியவர் முதலமைச்சர் பழனிசாமி. அவரின் ஆட்சி தொடர்வதற்காக, இந்தத் தேர்தல் நடைபெற்றுவருகிறது. தடையில்லா மின்சாரம் வழங்கி, வளர்ச்சிப் பணிகளைப் பல்வேறு தடைகளைத் தாண்டி செய்த அரசு அதிமுக அரசு.

வேளாண்மையில் நீர் மேலாண்மை, நிர்வாகத் திறமையில் முதலிடம் பெற்ற எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியினை அனைவரும் விரும்புகின்றனர். ஒரு சாதாரண சாமானியன் முதலமைச்சராக வர வேண்டும்.

மக்களின் நம்பிக்கையைப் பெற்ற எடப்பாடி பழனிசாமி மீண்டும் மக்கள் சேவையாற்றிடும் வாய்ப்பை இந்தத் தேர்தல் தரும் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details