தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'எதிர்க்கட்சிகள் மக்களுக்கு கடலைமிட்டாய்கூடத் தரவில்லை' - உதயகுமார் திருமங்கலம் நிவாரண உதவி

மதுரை: திருமங்கலம் பகுதியில் எதிர்க்கட்சிகள் இதுவரை கடலைமிட்டாய்கூடத் தரவில்லை என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஆர் பி உதயகுமார்  minister rb udhayakumar  மதுரை மாவட்டச் செய்திகள்  திருமங்கலம் செய்திகள்  உதயகுமார் திருமங்கலம் நிவாரண உதவி  எதிர்கட்சிகள்
எதிர்கட்சிகள் மக்களுக்கு கடலைமிட்டாய் கூடத் தரவில்லை- ஆர்.பி. உதயகுமார்

By

Published : May 11, 2020, 10:11 AM IST

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியிலுள்ள 1,01,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சார்பாக 5 கிலோ அரிசி வீடு வீடாக சென்று வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருமங்கலம் நகர் பகுதியில் உள்ள சோழவந்தான் சாலையில் அரிசி வழங்கும் வாகனத்தை கொடியசைத்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கி வைத்தார்.

பின்னர் மக்களிடையே பேசிய அவர்,"கரோனா நோய்த் தடுப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறார். 2.70 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மார்ச் முதல் ஜூன் வரை இலவசமாக நியாய விலைக் கடைகள் மூலம் நிவாரணப் பொருள்கள் வழங்கப்படுகிறது.

திருமங்கலம் பகுதி நாளை முதல் தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து விலக்கு அளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவிருக்கிறது. திருமங்கலம் பகுதியில் மக்களுக்கு இதுவரை கடலை மிட்டாய்கூட எதிர்கட்சியினர் தரவில்லை.

எதிர்கட்சிகள் மக்களுக்கு கடலைமிட்டாய் கூடத் தரவில்லை- ஆர்.பி. உதயகுமார்

ஆனால், அதிமுக கட்சியில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பினரும் மக்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் தேடித்தேடி செய்து வருகின்றனர்" என்றார்.

இதையும் படிங்க:மதுரை பல்கலை.,யில் கரோனா சிகிச்சை எனப் பரப்பியவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details