தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அருகில் வந்த தொண்டரை தள்ளிவிடும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்...வைரல் வீடியோ - திருமங்கலம் செய்திகள்

தனக்கு அருகில் வந்த அதிமுக தொண்டர் ஒருவரை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தள்ளிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

minister rb udhayakumar pushed hir cadre in thirumangualm
அருகில் வந்த தொண்டரை தள்ளிவிடும் அமைச்சர்...வைரல் வீடியோ

By

Published : Dec 22, 2020, 10:32 PM IST

மதுரை :மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொது மக்களுக்கு முகக்கவசம், பிஸ்கட் பாக்கெட்டுகளை தினந்தோறும் ஒவ்வொரு பகுதியாக சென்று தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வழங்கிவருகிறார்.

அருகில் வந்த தொண்டரை தள்ளிவிடும் அமைச்சர்...வைரல் வீடியோ

அதேபோல் இன்று காலை திருமங்கலம் அருகே உள்ள கண்டுகுளம் சாத்தங்குடி,போல் நாயக்கன்பட்டி புல்ல முத்தூர்,கீழ உரப்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று பொதுமக்களுக்கு முகக்கவசம், பிஸ்கட் உள்ளிட்டவற்றை வழங்கினார்.

இந்தநிலையில், சாத்தங்குடி கிராமத்தில் முகக்கவசம் வழங்கியபோது அதிகமான மக்கள் கூடியதால் அனைவருக்கும் முகக்கவசம் வழங்கிவிட்டு வந்த போது அமைச்சரை பார்க்க வந்த ஒரு தொண்டரை அமைச்சர் பிடித்து தள்ளி விடுவது போன்ற காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தன்னை நெருங்கி வந்த தொண்டரை அமைச்சர் பிடித்து தள்ளிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவியதால் திருமங்கலம் பகுதியில் இந்நிகழ்வு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:ஸ்டாலினுக்காக மேடை அமைக்க குளக்கரையின் மணல் எடுக்கப்பட்டதா?

ABOUT THE AUTHOR

...view details