தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டு மனை இல்லாதவர்களுக்கு சொந்தமாக மனை - ஆர்.பி. உதயகுமார் வாக்குறுதி - அமைச்சர் ஆர் பி உதயகுமார் தேர்தல் பரப்புரை

திருமங்கலம் தொகுதியில் வீட்டுமனை இல்லாதவர்களுக்கு சொந்தமாக வீட்டுமனை வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி தந்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பரப்புரை மேற்கொண்டுள்ளார்.

minister rb udhayakumar
அமைச்சர் ஆர் பி உதயகுமார் தேர்தல் பரப்புரை

By

Published : Mar 13, 2021, 7:22 PM IST

மதுரை:மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.பி. உதயகுமார் திருமங்கலம் மறவன்குளம் வரத வேங்கடராமன் பெருமாள் கோயிலில் தரிசனம் செய்து தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார்.

துண்டு பிரசுரங்கள் வழங்கி பரப்புரை மேற்கொள்ளும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

இதையடுத்து வீடு வீடாகச் சென்று இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்குகள் சேகரித்தார். பின்னர், தொண்டர் ஒருவரின் வீட்டில் அமர்ந்து பால் சாப்பிட்ட பின் பரப்புரை வாகனத்தில் ஏறி மக்களிடையே பேசினார்.

தேர்தல் பரப்புரைக்கு இடையே தொண்டர் வீட்டில் பால் அருந்திய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

அப்போது அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது:

சொந்தமாக வீட்டு மனை

திருமங்கலம் தொகுதியில் அம்மா வீட்டு மனைத் திட்டம் தொடங்கி, வீடு இல்லாதவர்களுக்கு வீட்டு மனை சொந்தமாக வழங்கப்படும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்தப் பகுதியில் பல ஆண்டுகளாக குடியிருக்கும் மக்களுக்கு வருவாய்த் துறை சார்பாக வீட்டுமனை வழங்கப்படும்.

தேர்தல் பரப்புரைக்கு முன்னர் கோயிலில் தரிசனம்

அரசின் சார்பில் வீட்டுமனை பட்டா வழங்குவதோடு மட்டுமல்லாது, சொந்த முயற்சியில் அம்மா வீட்டு மனை திட்டத்தின் மூலம் வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுப்போம் என்று மீண்டும் தேர்தல் வாக்குறுதியாக அளித்ததார்.

தற்போதுவரை 27 லட்சம் குடும்பத்துக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

வீட்டு மனை இல்லாதவர்களுக்கு சொந்த முயற்சியில் மனை வழங்க முயற்சி மேற்கொள்வேன்

முதலமைச்சர் அரசாணை நாயகன்

தற்போது, எதிர்க்கட்சிகள் பயிர்க் கடன், நகைக் கடன் தள்ளுபடி என கூறி மக்களவைத் தேர்தலில் வாக்குகளை பெற்றுச் சென்றனர்.

எதிர்க்கட்சியினர் அறிக்கைதான் விடமுடியும். ஆனால், அரசாணை வெளியிடுவது அதிமுக அரசுதான். ஸ்டாலின் அறிக்கை நாயகன். நமது முதலமைச்சர் அரசாணை வெளியிடும் நாயகன் என்றார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசாணை நாயகன்

முத்தரையருக்கு வெண்கல சிலை

இதைத்தொடர்ந்து திருமங்கலம் தொகுதியில், மருதுபாண்டியர் மூக்கையாத் தேவர் சிலை போல் முத்தரையர் சமுதாயத்துக்காக பாடுபட்ட முத்தரையர் வெண்கலச் சிலைகள் அமைக்கப்பட உள்ளது. பொதுமக்களின் உணர்வுகளை மதிப்பது அதிமுக அரசுதான்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையும் படிங்க:'அமைச்சர் கே.சி. வீரமணிக்கும் துரை முருகனும் ரகசிய உறவு'- குற்றஞ்சாட்டும் நிலோபர் கபில்

ABOUT THE AUTHOR

...view details