மதுரை புறநகர் பகுதியான பரவை காய்கறி சந்தையில் நள்ளிரவு 11 மணியளவில் வருவாய் மற்றும் பேரிடர் மேலான்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மதுரை மாவட்ட ஆட்சியர் வினய், மாநகராட்சி ஆணையர் விசாகன் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''மதுரையில் ரேபிட் கிட் மூலம் முதல்கட்டமாக கரோனா பாதிப்பால் தடை செய்யப்பட்ட பகுதிகளில் பணியாற்றிய மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல் துறையினர் என 70 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. அதில் ஒருவருக்குக் கூட கரோனா தொற்று இல்லை.