மதுரை, திருமங்கலம் பகுதி முழுவதும் உள்ள ஒரு லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு, 5 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை வருவாய் துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அந்நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது, சிகிச்சைகள், பரிசோதனைகள், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை என அனைத்திலும் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது. உலக நாடுகளிலேயே கரோனா இறப்பு விகிதம் மிக குறைந்த நாடாக தமிழ்நாடு திகழ்கிறது.
மேலும், 2 கோடி குடும்ப அட்டைதாரர்கள் அல்லது 8 கோடி மக்களுக்கு இன்று உணவை வழங்க கூடிய நடவடிக்கையை முதலமைச்சர் எடுத்துள்ளார். அதற்கு திருமங்கலம் மதுரை மாவட்டத்தில் முன்மாதிரியாக இருந்து வருகிறது. ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் வெளியே வரக்கூடாது என்பதற்காக ஒரு லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கழகம் சார்பாக 5 கிலோ காய்கறிகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து தற்போது ஐந்து கிலோ அரிசி வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், இன்று அரசியலிலே எதிர்க்கட்சி மற்றும் மாற்றுக்கருத்துக்கள் இருப்பவர்கள் அரசு எதை செய்தாலும் அதை விவாதப் பொருளாக மாற்றி, அதில் அரசியல் ஆதாயம் தேடி மக்களின் கவனத்தை திருப்பி, மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக முன்நின்று செய்து வருகிறார்கள். அதற்கான நேரம் இதுவல்ல.
தற்போது தேசிய பேரிடரை தாண்டி உலக பேரிடர் ஆக மாறியுள்ளது. இந்நேரம் என்பது தன்னால் முடிந்த பணிகளை செய்து, மக்களுக்கு உதவிகளை செய்து, அவர்களை காப்பாற்றி அவர்களை கரை சேர்த்து பின் தான் விவாதம் செய்ய வேண்டும்.
பேரையூர் பகுதியில் வேளாண் சார்ந்த பொருட்கள் வழங்கும் காட்சி அதை விட்டு விட்டு தன்னை மக்கள் மறந்து விடுவார்கள் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக, தன்னை மக்களிடத்தே மேல் உயர்த்திக் கொண்டு வருவதற்காக எதையும் செய்யாமல், எல்லாத்தையும் செய்தது போல ஒரு நாடகத்தை அரங்கேற்றுவது மக்கள் விரும்பவில்லை. மக்களுக்கு தெரியும் யார் மனிதநேயத்துடன் ஆக்கபூர்வமாக செயல்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.
முடிவில், முகக் கவசங்கள் அணிந்து அனைவரும் தனது பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பேரிடர் காலங்களில் நாங்கள் இதை செய்வோம் என்று சொல்லி செய்பவர்கள் நாங்கள் இல்லை என அமைச்சர் கூறினார்.
திருமங்கலத்தில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் குற்றச்சாட்டு அதுபோல, பேரையூர் பகுதியில், வருவாய் துறை வேளாண்மைத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பாக 57 பயனாளிகளுக்கு ரூ.35 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, வருவாய்த்துறை பேரிடர் மேலாண்மை துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார் வழங்கினார்.
இதையும் படிங்க:துரை மாவட்டத்தில் இறைச்சிக் கடைகள் திறக்க சனி ஞாயிறு தடை