தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஸ்டாலின் போராடுவது உதயநிதியை முன்னிலைப்படுத்துவதற்காகவே' - ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு - Minister RB Uthayakumar MADURAI

மதுரை: ஸ்டாலின் போராட்டம் நடத்துவது தமிழ்நாடு உரிமைக்காக அல்ல, அவரது மகன் உதய நிதியை பதவி அதிகாரத்திற்கு வர வைப்பதற்காக மட்டுமே என அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

Campaign
Campaign

By

Published : Dec 29, 2019, 12:25 PM IST

இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலின் பரப்புரை நேற்று மாலை 5 மணியுடன் நிறைவுற்றது. இறுதி கட்ட பரப்புரையில் அதிமுக சார்பில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், டி. கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்.

பின்னர் அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ' பொங்கல் விடுமுறை அன்று பிரதமரின் உரையைக் கேட்பதற்காக பள்ளிக்கு மாணவர்கள் வரவேண்டும் என்று கூறப்பட்டதற்கு, ஸ்டாலின் போராட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்தது குறித்து வினா எழுப்பப்பட்டது.

' ஸ்டாலின் போராடுவதற்குக் காரணங்களைத் தேடுகிறார். அடுத்தடுத்து போராடுவதற்கு எந்த ஒரு இலக்கணமும் இல்லாமல் எதிர்க்கட்சி உள்ளது. தமிழகத்தின் உரிமைக்காக எதிர்க்கட்சி போராடாமல், அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலினை உருவாக்குவதற்காக, அதிகாரத்தில் அமர வைப்பதற்காக ஸ்டாலின் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்' என்றார்.

பரப்புரையில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

இதையும் படிங்க: பள்ளிக் கல்வித்துறை அதிமுக அரசின் கட்டுப்பாட்டில் இல்லையா ? - ஸ்டாலின் கேள்வி

ABOUT THE AUTHOR

...view details