தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிவாஜிகணேசன் நிலைதான் அரசியலுக்கு வரும் நடிகர்களுக்கும் -அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்! - Minister RB Udayakumar accept CM comment

மதுரை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடிகர்கள் அரசியலுக்கு வரும்போது சிவாஜி கணேசனின் நிலைமைதான் வரும் என்று சொன்னதில் எள்ளளவும் மாற்றம் இல்லை, அதை நான் வழிமொழிகிறேன் என வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

Minister RB Udayakumar accept CM comment

By

Published : Nov 13, 2019, 3:06 PM IST

தமிழ்நாடு அரசின் சாதனையை விளக்கும் வண்ணமாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் 1000 பேர் கலந்துகொள்ளக்கூடிய தொடர் ஜோதி நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நடைபயணம் ஐந்து நாள்கள் மதுரையில் உள்ள 10 தொகுதிகள் 30 லட்சம் மக்கள் சந்திப்பு நடைபெறவுள்ளது.

இதில் பங்கேற்ற வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டுகளை அடுக்கிவரும் மு.க. ஸ்டாலினுக்கு இந்தப் பயணத்தின் மூலமாக எங்களது ஆட்சியின் சாதனைகளையும் மக்களுக்கு உண்மைகளை எடுத்துரைத்து திமுகவின் பொய்யான முகத்தை தோலுரித்துக் காட்டுவதே எங்களது முதல் கடமை.

பிரதமர் நரேந்திர மோடி அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டிற்கு அழைத்து வர அனைத்துவிதமான முயற்சிகளையும் மேற்கொள்வோம்” எனத் தெரிவித்தார்.

மேலும், “முதலமைச்சர் ஒரு கருத்துச் சொன்னால் அது மிகச் சரியானதாக இருக்கும் என்பதில் மாற்றமில்லை. அதனால் நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் சிவாஜி கணேசன் நிலைமை என்று சொன்னதில் உண்மை உள்ளது” எனக் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details