தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரஜினி அரசியலுக்கு வந்தால் மனதார வரவேற்போம் - ஆர்.பி.உதயகுமார் - ரஜினி மக்களின் அங்கீகாரம் பெற வேண்டும்

மதுரை: ரஜினியை வரவேற்கிறோம், மக்கள் பணியாற்ற வேண்டும், மக்கள் அங்கீகாரம் கொடுப்பதை மக்களோடு சேர்ந்து நாங்களும் பார்ப்பதற்கு ஆர்வத்தோட இருக்கிறோம் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

minister rb udyakumar
minister rb udyakumar

By

Published : Feb 15, 2020, 11:13 PM IST

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற அன்னதானம் வழங்கும் விழாவை தமிழ்நாடு வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி .உதயகுமார் தொடங்கி வைத்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் பத்தாவது நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார். இந்த நிதிநிலை அறிக்கை கவர்ச்சி திட்டங்கள் இல்லாமல் மக்களின் மனதை கவரும் திட்டங்களே அதிகமாக உள்ளது. செலவினங்களை கட்டுப்படுத்தி சமூகம் பாதுகாப்பு திட்டத்துக்காக ஒதுக்கீடுகளை உயர்த்திக் கொடுத்துள்ளது என்று தெரிவித்தார்.

ரஜினியை வரேவேற்ற ஆர்.பி.உதயகுமார்

இதைத்தொடர்ந்து, ரஜினி கட்சி தொடங்குவது குறித்த கேள்விக்கு, "மதுரை தூங்காநகரம், கோயில் நகரம், ராசி நகரமாகவும் திகழ்கிறது. ஆனால் அவர்களுடைய ராசி உள்ளதா? என்பது கட்சி தொடங்கிதற்கு பிறகுதான் தெரியும்.

ரஜினியை வரவேற்கிறோம், மக்கள் பணியாற்ற வேண்டும், மக்கள் அங்கீகாரம் கொடுப்பதை மக்களோடு சேர்ந்து நாங்களும் பார்ப்பதற்கு ஆர்வத்தோட இருக்கிறோம்" என்றார்.

இதையும் படிங்க: கச்சா எண்ணெய் கிணறுகள் மூடப்படுமா? - எஸ். ராமலிங்கம் எம்.பி. கேள்வி

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details