விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ’எய்ம்ஸ் மருத்துவமனையைப் பொறுத்தவரை மத்திய அரசு விளம்பரத்திற்காக செய்ததா என்ற சந்தேகம் எழுகிறது. தேர்தலுக்கு முன்பாக பிரதமர் மோடி அவசர அவசரமாக இங்குவந்து அடிக்கல் நாட்டினார். அதற்குப் பின் 6 மாதங்களாகியும் எந்த ஒரு வேலையும் தொடங்கப்படவில்லை. இதுகுறித்து மத்திய அமைச்சரை சந்தித்து நிச்சயம் கேள்வி எழுப்புவோம்.
விருதுநகர் எம்.பி.மாணிக் தாகூர் நம்முடைய மங்குனி அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பொறுத்தமட்டில், நிதானம் இழந்துவிட்டார். சோனியா காந்தியிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். மக்கள் அவரை சிவகாசியிலேயே நிராகரிப்பார்கள் என்பது தெரிந்த விஷயம். 2021ஆம் ஆண்டு நிச்சயம் சிறையில் இருப்பார்.
மங்குனி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டதற்கான அனைத்து விஷயங்களும் வெளிவந்து கொண்டிருக்கிறது. மங்குனி அமைச்சர் மணல் கொள்ளையில் ஈடுபட்டதற்கான மிக முக்கியமான ஆதாரங்கள் சிக்கியுள்ளன. இது அனைத்திலிருந்தும் பாஜகவைச் சார்ந்தவர்கள் காப்பாற்றுவார்கள் என்று நம்புகிறார்.
நாங்குநேரியில் நிச்சயம் காங்கிரஸ் வெற்றிபெறும். நாடாளுமன்றத் தேர்தலின்போது இப்படித்தான் அதிமுகவினர் வசனம் பேசிக்கொண்டிருந்தார்கள். மக்களின் பிரச்னைகளை விட்டுவிட்டு இடைத்தேர்தல்களில் சென்று, பணம் கொடுத்து வெற்றி பெறவேண்டும் என்ற ஒரே கொள்கையுடன் அதிமுகவினர் இருக்கிறார்கள். எனவே அவர்களின் தோல்வி உறுதியானது’ என்றார்.
இதையும் படிக்கலாமே: கே.எஸ்.அழகிரி சரியான கூமுட்டை -அமைச்சர் செல்லூர் ராஜூ