மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்படும் என ஸ்டாலின் பேசியதற்கு பதிலளித்த அமைச்சர், "ஸ்டாலின் விஷயம் தெரியாமல் பேசிவருகிறார். நடைபெறவுள்ள தேர்தல் உள்ளாட்சித் தேர்தலா அல்லது சட்டப்பேரவைத் தேர்தலா என்ற வேறுபாடுகூட தெரியாமல் ஆட்சி மாற்றம் வரும் என பேசிவருகிறார்" என்றார்.
அடுத்த தேர்தல் முடிந்த பிறகு உறுப்பினர்கள் யாரும் அதிமுகவில் இருக்கமாட்டார்கள் என்ற டிடிவி தினகரன் கூறியதற்கு பதிலளித்த ராஜேந்திர பாலாஜி, இப்போது அவர் கட்சியில் யார் இருக்கிறார்கள். அனைவருமே அதிமுகவுடன் இணைந்து விட்டார்கள். அவருடன் யாரும் கிடையாது, அவர் மட்டும்தான் தனியாக உள்ளார் எனத் தெரிவித்தார்.