தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசியலமைப்பை மீறி வேறு யார் வழங்கும் அறிவுரைகளும் எங்களுக்குத்தேவையில்லை... அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் - அமைச்சர் பிடிஆர்

சர்வாதிகாரமாக வழங்கப்படும் அறிவுரைகளை ஒருபோதும் பின்பற்றமாட்டோம் என மதுரையில் நடைபெற்ற அரசு உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat அமைச்சர் பிடிஆர் பேச்சு
Etv Bharat அமைச்சர் பிடிஆர் பேச்சு

By

Published : Aug 18, 2022, 4:22 PM IST

மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட எஸ்.எஸ். காலனியில் உள்ள எம்.ஆர்.பி மஹாலில் நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு 586 பயனாளிகளுக்கு ரூ.93 லட்சத்து 14ஆயிரத்து 596 மதிப்புள்ள அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முன்னதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது, “இந்திய வரலாற்றில் பொருளாதாரம், சட்டம், மனித வளம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மேலாண்மையை உருவாக்கி, உலகத்திலேயே சிறந்த ஆலோசகர்கள் அறிவுரையின் அடிப்படையில் இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

தனி நபர் அறிவுரை அளிப்பதுபோல் அரசியல் ரீதியாக சிலர் அறிவுரை வழங்கிக்கொண்டு இருக்கிறார்கள். அரசியலமைப்பை மீறி யார் அளிக்கும் அறிவுரைகளும் எங்களுக்குத் தேவையில்லை. சர்வாதிகாரமாக வழங்கப்படும் அறிவுரைகளை ஒருபோதும் பின்பற்றமாட்டோம்” என்றார்.

இந்த விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஸ்சேகர், மாநகராட்சி ஆணையாளர், மாநகராட்சி மேயர், மாநகராட்சி துணை மேயர் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

அரசியலமைப்பை மீறி வேறு யார் வழங்கும் அறிவுரைகளும் எங்களுக்குத்தேவையில்லை... அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

இதையும் படிங்க:ஆவடி சிறுமியின் சிகிச்சைக்கு முதலமைச்சர் உறுதுணை இருப்பார்...அமைச்சர் நாசர் உறுதி

ABOUT THE AUTHOR

...view details