மதுரை:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான நன்மாறன் (74) மூச்சுத் திணறல் காரணமாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நேற்று (அக்.28) காலமானார்.
அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக மதுரை மாப்பாளையம் பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மறைந்த நன்மாறன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: நன்மாறன் உடலுக்கு முதலமைச்சர் நேரில் அஞ்சலி!