தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நகை கடன் தள்ளுபடி? - அமைச்சர் தகவல்! - தமிழ் செய்திகள்

கூட்டுறவு சங்கங்களில் ஐந்து சவரன் நகை கடன் தள்ளுபடி குறித்த அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.

Minister Periyasamy
Minister Periyasamy

By

Published : Jul 11, 2021, 2:22 PM IST

மதுரை: கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமையில், பல்வேறு செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள், மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, “விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாக கடன்கள் வழங்க 11,500 கோடி ரூபாய்க்கு மேல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு குறைபாடு இல்லாமல் வழங்க ஆணை பிறப்பக்கப்படவுள்ளது. அதை செயல்படுத்துவது, மேலும் பல்வேறு திட்டங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதுபோல் கூட்டுறவு சங்கங்களில் ஐந்து பவுன் நகை கடன் தள்ளுபடி செய்வது குறித்த அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும். தமிழ்நாடு அரசின் திட்டங்களை முழுமையாக பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தீவிரமாக இயங்கிவருகிறோம். பேரிடர் பாதிப்புக்குள்ளாகும் விவசாயிகளுக்கு உடனே நிவாரணம் வழங்கப்படும்” என்றார்.

இதையும் படிங்க: சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு!

ABOUT THE AUTHOR

...view details