தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தொழிற்சாலைகளில் சிறப்பு முகாம் அமைத்து தடுப்பூசி' அமைச்சர் பி.மூர்த்தி! - தொழிற்சாலைகளில் சிறப்பு முகாம் அமைத்து தடுப்பூசி

மதுரை: தொழிற்சாலைகளில் சிறப்பு முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது என, வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.

தொழிற்சாலைகளில் சிறப்பு முகாம் அமைத்து தடுப்பூசி
தொழிற்சாலைகளில் சிறப்பு முகாம் அமைத்து தடுப்பூசி

By

Published : May 30, 2021, 8:58 AM IST

மதுரை கோச்சடை பகுதியில் அமைந்துள்ள பென்னர் இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்று வருகிறது. இதனை வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மதுரை மாவட்டத்தில் கரோனா தாக்கம் குறையத் தொடங்கியுள்ளது.

தொழிற்சாலைகளில் சிறப்பு முகாம் அமைத்து தடுப்பூசி!

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேட்டுக்கொண்டதன் பேரில், மேற்குத் தொகுதியிலுள்ள தொழிற்சாலைகளில் சிறப்பு முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி முகாம்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

மதுரை மாவட்டத்தில் கிராமங்களில் கரோனா பரவல் ஆரம்ப நிலையில் உள்ளது. அதனைத் தடுக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது"என்றார்.

இதையும் படிங்க: அனைத்துநிலை ஊடகவியலாளர்களுக்கும் கரோனா ஊக்கத்தொகை: வலியுறுத்தும் சீமான்!

ABOUT THE AUTHOR

...view details