மதுரை மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகிகள், மருத்துவர்களுடன் வணிக வரித் துறை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், கண்காணிப்பு அலுவலர் சந்திரமோகன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.
தனியார் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், கரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவது குறித்தும், முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை அளிக்க மறுக்கப்படுவதாக வரும் குற்றச்சாட்டுகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில்விவாதிக்கப்பட்டன.
பின்னர் அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், "முதலமைச்சரின் சீரிய முயற்சியால் முழு ஊரடங்கு பயனைத் தந்துள்ளது. மதுரையில் நாளுக்கு நாள் கரோனா தொற்று குறைந்துவருகிறது.
ஒரு வாரத்துக்கு முன்னர் 1,500 ஆக இருந்த பாதிப்பு தற்போது 700-க்கும் கீழ் வந்துள்ளது. அடுத்த ஒரு வாரத்தில் மதுரையில் கரோனா பாதிப்பு மிக மிகக் குறையும்.