தமிழ்நாட்டில் கரோனா சிகிச்சைக்கான ஆக்ஸிஜன் பற்றாக்குறையைத் தவிர்க்கப் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில், மதுரை மாவட்டத்தில் கரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக, யாதவர் கல்லூரி, அமெரிக்கன் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் கூடுதலாக சித்தா ஆயுர்வேத சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
தயார் நிலையிலுள்ள 500 ஆக்ஸிஜன் வசதியுடைய படுக்கை: அமைச்சர் மூர்த்தி ஆய்வு!
மதுரை: தோப்பூர் அரசு மருத்துவமனையில் தயார் நிலையிலுள்ள 500 ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கை சிகிச்சை மையத்தை வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி நேற்று(மே.19) ஆய்வு செய்தார்.
மேலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையைத் தவிர்க்கும் வகையில், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே தோப்பூர் அரசு மருத்துவமனையில் 500 எண்ணிக்கையிலான ஆக்ஸிஜன் படுக்கை வசதியுடன் கூடிய சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது.
துரிதமாக நடைபெற்று வரும் சிகிச்சை மைய பணிகளை தமிழ்நாடு வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி நேரடியாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில் குமாரி, ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் இந்துமதி, அரசு மருத்துவமனை டீன் ரத்னவேலு, தோப்பூர் மருத்துவமனை மருத்துவர் காந்திமதி நாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.