தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அனைத்து துறைகளிலும் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து ஆய்வு - அமைச்சர் மூர்த்தி - smart city scheme

ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மட்டுமன்றி வேறு எந்தெந்த துறைகளில் முறைகேடுகள் நடந்துள்ளது என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

அமைச்சர் மூர்த்தி
அமைச்சர் மூர்த்தி

By

Published : Aug 1, 2021, 9:57 PM IST

மதுரை:மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு கரோனா தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் தடுப்பூசி முகாமை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்றனர்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கூறியதாவது, "தமிழ்நாடு முழுவதும் ஆடிப் பெருக்கு விழாவின் போது பொதுமக்கள் அதிகம் கூட்டம் கூட வாய்ப்புள்ளதால், அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. முக்கிய கோயில்களுக்குச் செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி பணிகள்

மதுரை மாவட்டத்தில் போதுமான அளவு ஆக்ஸிஜன் உள்ளது. ஒன்றிய அரசிடமிருந்து பெற்ற தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கரோனா பேரிடர் காலம் என்பதால் பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மட்டும் இல்லாமல் வேறு எந்த துறைகளில் முறைகேடுகள் நடந்துள்ளது என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறினார்.

இதையும் படிங்க: பென்னிகுயிக் வாழ்ந்த இடத்தை இடித்து கலைஞர் நூலகமா? - அதிமுக கண்டனம்

ABOUT THE AUTHOR

...view details