மதுரையில் கீழடி அகழாய்வு தொல்பொருட்கள் கண்காட்சியை பார்வையிட்ட பின் தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப்பண்பாடுத் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது திருவள்ளுவர் விவகாரம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், ”பிரிட்டிஷை சேர்ந்த லார்ட் எல்லிஸ் என்பவர் வெளியிட்ட தங்க நாணயத்தில் திருவள்ளுவரின் உருவத்தை வரைந்திருந்தார். அதை வைத்து நாம் ஆராய்ந்தால் திருவள்ளுவர் ஒரு சமண மத துறவிபோல உள்ளதாகத் தெரிகிறது.
‘திருவள்ளுவர் இந்து என்பதற்கு வரலாற்றில் ஆதாரமில்லை!’ - அமைச்சர் கே. பாண்டியராஜன் - thiruvalluvar statue
மதுரை: திருவள்ளுவர் ஒரு இந்து மத துறவி என்பதற்கு வரலாற்றில் எந்த ஆதாரமும் இல்லை என அமைச்சர் கே. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
Minister mafoi Pandiarajan tells about Thiruvalluvar
தலையிலுள்ள முடியின் அமைப்பு, தலைக்கு மேல் ஒளிவட்டம் ஆகியவற்றைக் கொண்டு பார்க்கும்போது சமண மதத்தைச் சேர்ந்தவராகவே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அவர் கடவுள் வாழ்த்து எழுதியிருப்பதால் அவர் கடவுள் நம்பிக்கை உள்ளவராகதான் இருந்திருப்பார். ஆனால் அவர் இந்து மத துறவி என்பதற்கு வரலாற்றில் எந்த ஆதாரமும் இல்லை. திருவள்ளுவர் எல்லாருக்கும் பொதுவான தெய்வப்புலவர்” என்று கூறினார்.
இதையும் படிங்க: ‘திருக்குறள் படித்து திருந்தப் பாருங்கள்’