மதுரையில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு தொழில் வர்த்தகச் சங்கத்தின் 96ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
பின்னர் கடம்பூர் ராஜு பேசுகையில், "மதுரையைப் பொறுத்தவரை கடந்த 85 நாள்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தரமான ஆரோக்கியமான உணவை அம்மா கிச்சன் மூலமாக வழங்கப்பட்டுவருகிறது. இங்கு வழங்கப்படும் உணவின் காரணமாக கரோனா தொற்று மதுரையில் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தமிழ்நாடு வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் முன்மாதிரியாகச் செயல்படுத்திவருகிறார். அம்மா கிச்சன் என்ற திட்டம் இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் செயல்படுத்தாத ஒன்றாகும். தற்போது, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.