மதுரை:முல்லைப் பெரியாறு அணையின் உண்மை நிலை குறித்து நேரில் சென்று ஆய்வு செய்ய நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன், சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை சென்றார்.
அதிமுக அமைச்சர் முல்லை பெரியாறு அணையை பார்த்தாரா? - அமைச்சர் துரைமுருகன் கேள்வி - மதுரை செய்திகள்
கடந்த ஆட்சியிலிருந்த அமைச்சர் முல்லைப் பெரியாறு அணையை நேரில் போய் இருக்கிறாரா என்பதை கூறி விட்டு போராட்டம் நடத்தட்டும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
![அதிமுக அமைச்சர் முல்லை பெரியாறு அணையை பார்த்தாரா? - அமைச்சர் துரைமுருகன் கேள்வி mullai periyar dam minister duraimurugan minister duraimurugan talks about mullai periyar dam madurai airport மதுரை செய்திகள் முல்லை பெரியாறு அணை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-13551173-thumbnail-3x2-mullai.jpg)
அமைச்சர் துரைமுருகன்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்கள் அதிமுகவினர். அப்போது துறை சார்ந்த அமைச்சர் யாரேனும் முல்லைப் பெரியாறு அணையை நேரில் பார்த்தார்களா என்பதை கூறிவிட்டு அவர்கள் போராட்டம் நடத்துவதே சரியானது” என்று கூறினார்.
ல்லை பெரியாறு அணையை பார்வையிட செல்லும் துரைமுருகன்