தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பால் வியாபாரி வெட்டிக்கொலை - மதுரையில் பயங்கரம்

மதுரை: அதிகாலையில் பால் வியாபாரி முகமூடி அணிந்த கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பால் வியாபாரி வெட்டிக்கொலை - மதுரையில் பயங்கரம்

By

Published : Nov 20, 2019, 12:52 PM IST

மதுரை மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்(30). அதே பகுதியில் பெற்றோருடன் வசித்துவந்த இவர் பிரபல தனியார் பால் நிறுவனத்தின் ஏஜென்சி எடுத்து அந்த பகுதியில் பால் விநியோகம் செய்யும் தொழில் செய்துவந்தார்.

இந்நிலையில் இன்று காலை பால் விநியோகம் செய்யும்போது முகமூடி அணிந்து வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவனியாபுரம் காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பால் வியாபாரி வெட்டிக்கொலை

மேலும் மனைவியைப் பிரிந்து வாழும் ரமேஷின் குடும்பப் பிரச்னையால் கொலை நடந்ததா அல்லது தொழில் போட்டியின் காரணமாக இந்தக் கொலை நடந்ததா என்ற கோணங்களில் ஐந்து தனிப்படைகள் அமைத்து காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.

இதையும் படிங்க:

உள்ளாட்சித் தேர்தல்: வார்டு பிரிவு இடஒதுக்கீட்டில் குளறுபடி

ABOUT THE AUTHOR

...view details