மதுரை மாவட்டம் அச்சம்பத்து அருகே ஆழ்குழாய் துளையிடும் தொழிலில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தை தொழிலாளர்கள் உள்பட ஐந்து பேர் பணிபுரிந்து வந்துள்ளனர். கரோனா பாதிப்பு காரணமாக அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். இருப்பினும் உரிமையாளர் அவர்களை கொத்தடிமையாக வேலை வாங்கியுள்ளார். இதுகுறித்து மக்கள் கண்காணிப்பகம் மற்றும் ஐடியாஸ் மனித உரிமை அமைப்புக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்டையில் அங்கு வந்த அலுவலர்கள் அனைவரையும் மீட்டனர்.
இதுகுறித்து ஐடியாஸ் நிறுவனம் வழக்குரைஞர் பிலோமின் ராஜ் ஈடிவி பாரத் செய்தி ஊடகத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், "தற்போது மீட்கப்பட்ட அனைவரும் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடி தொழிலாளர்கள். மதுரை அச்சம்பத்து கிராமத்தில் உள்ள ஒரு இடத்தில் ஆழ்குழாய் துளையிடும் பணியில் கடந்த 5 நாட்களாக இரவு பகல் பாராமல் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரையில் 2 குழந்தை தொழிலாளர்கள் உள்பட 5 பேர் மீட்பு! - மதுரையில் தொத்தடிமையாக வேலை பார்த்த 5 வடமாநில தொழிலாளர்கள்
மதுரை: சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 2 குழந்தை தொழிலாளர்கள் உள்பட 5 கொத்தடிமை தொழிலாளர்களை ஐடியாஸ் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் முயற்சியால் இன்று மீட்கப்பட்டுள்ளனர்.
5 கொத்தடிமைத் தொழிலாளர்கள் மீட்பு
இவர்களில் இருவர் குழந்தை தொழிலாளர்கள் ஆவர். கடந்த ஒன்பது மாதங்களாக இவர்களது முதலாளி எந்தவித சம்பளம் தராமல் வேலை வாங்கி வருகிறார் என்பது புகாராக இந்த தொழிலாளர்களிடம் இருந்து எங்களுக்கு வந்திருந்தது. அதனடிப்படையில் இன்று அந்த இடத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டோம்.
இச்சம்பவம் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர், காவல்துறை தென் மண்டல தலைவர் உள்ளிட்ட அனைத்து உயர் அலுவலர்களும் புகார் பதிவு செய்துள்ளோம். பாதிக்கப்பட்ட தொழிலாளர்களான சுரேஷ்குமார் (20), லல்லேஷ் (17), லால் ஜித் ரத்தியா (17), பஜ்ரங் (19), கரன்லால் (20) ஆகிய அனைவரையும் சொந்த ஊருக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த ஊர் செல்லும் வடமாநில தொழிலாளர்கள்