தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆய்வாளர் வசந்தி கைது: வழக்கின் தற்போதைய நிலை குறித்து தெரிவிக்க நீதிமன்றம் உத்தரவு!

கூலித்தொழிலாளியிடம் ரூ. 10 லட்சம் வழிப்பறி செய்த குற்றம் செய்யப்பட்ட நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் வசந்தி கைது செய்யப்பட்டதற்கு பின்பு வழக்கின் நிலை குறித்து உரிய தகவல் பெற்றுத் தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ஆய்வாளர் வசந்தி கைது
ஆய்வாளர் வசந்தி கைது

By

Published : Sep 6, 2021, 1:20 PM IST

மதுரை:தல்லாகுளத்தைச் சேர்ந்த வசந்தி, நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த மாதம் கூலி வேலை செய்யும் தொழிலாளி ஒருவரிடம் ரூ.10 லட்சம் பணத்தை வழிமறித்து பறித்துக் கொண்டதாக, மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர், வசந்தி உள்ளிட்ட ஐந்து காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் வழக்கு பதியப்பட்டது.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த போது ஆய்வாளர் வசந்தி, முன்பிணைக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில்,"கள்ள நோட்டு மாற்றி கடத்துவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து சோதனை செய்ய, அவரிடமிருந்த 2 பைகளை பரிசோதித்து பார்த்தேன். அதில் பணம் எதுவும் இல்லை. ஆனால் தவறான குற்றச்சாட்டின் பேரில் என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே, இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

அந்த வழக்கு, கடந்த மாதம் நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆய்வாளர் வசந்தி கைது செய்யப்பட்டாததற்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர்ஸ, தனது சகோதரருடன் கோத்தகிரியில் தலைமறைவாக இருந்த ஆய்வாளர் வசந்தியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்த நிலையில் ஆய்வளர் வசந்தியின் முன்பிணை வழக்கு இன்று( செப்.6) நீதிபதி புகழேந்தி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, "இந்த வழக்கின் நிலை குறித்து நீதிமன்றம் அறிந்து கொள்ள விரும்புகிறது. ஆகவே, காவல் ஆய்வாளர் வசந்தி கைது செய்யப்பட்டதற்கு பின்னான வழக்கின் விசாரணையின் நிலை குறித்தும், வசந்தியிடமிருந்து பெறப்பட்ட விபரம் குறித்து உரிய தகவல் பெற்று தெரிவிக்க, அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க:இளைஞரிடம் ரூ.10 லட்சம் பறித்த வழக்கு: பெண் காவல் ஆய்வாளர் சிறையில் அடைப்பு

ABOUT THE AUTHOR

...view details