தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொதுநல வழக்குகள் தொடர்ந்தால், அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் - உயர் நீதிமன்றம்

நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகளைத் தாக்கல் செய்யும்போது, வழக்கு தொடர்பான முழுமையான ஆவணங்களுடன் வழக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்

By

Published : Oct 27, 2021, 12:03 PM IST

மதுரை: திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல்லா உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாடு வேளாண்துறை சார்பில் வழங்கக்கூடிய மானியத் திட்டங்களை கடந்த 2013ஆம் ஆண்டு முதல் வேளாண் இயக்குநர்கள், அலுவலர்கள், உதவியாளர்கள் என பலர் முறைகேடாக பல போலி விவசாயிகளுக்கு வழங்கியுள்ளனர்.

கடந்த 2016 முதல் 2021 வரை வேளாண் இயக்குநர் தக்ஷிணாமூர்த்தி, முன்னாள் வேளாண்துறை அமைச்சரின் உறவினர் என்பதால் பல முறைகேடுகள் செய்துள்ளார்.

ரூ. 1000 கோடிக்கு முறைக்கேடு

சொட்டுநீர் பாசன உபகரணங்களை வழங்கும் திட்டம், மானிய இயந்திரங்கள் கொள்முதல், விதை கொள்முதல், 'பிக்கோ கோமிரா', டேப்லெட், கணினி கொள்முதல் திட்டம், தமிழ்நாடு நீர்நிலை மேம்பாட்டு முகமை திட்டம், நிலையான நீர்ப்பாசன திட்டம், உழவர் உற்பத்தியாளர் குழு திட்டம், டெல்டாவில் குறுவை மற்றும் சம்பா தொகுப்பு திட்டம், விதை கொள்முதல் திட்டம், பயிர் காப்பீட்டு திட்டம் ஆகிய திட்டங்களை போலி விவசாயிகளுக்கு வழங்கியுள்ளார்.

இந்தத் திட்டங்களை செயல்படுத்தி ரூ.1000 கோடி அளவிற்கு மோசடி செய்துள்ளனர். எனவே, இதில் தொடர்புடைய வேளாண் இயக்குநர் தக்ஷிணாமூர்த்தி மீது லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, கடந்த 2013 முதல் 2021 வரை முறைகேட்டில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதனை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி துரைசாமி அமர்வு, மனுதாரர் வரும் காலங்களில் வழக்குகளை குறிப்பாக பொதுநல வழக்குகளைத் தாக்கல் செய்யும்போது, வழக்கு தொடர்பான முழுமையான ஆவணங்களுடன் வழக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: பாஜக பிரமுகர் கல்யாணராமன் மீது மீண்டும் பாயும் குண்டர் சட்டம்

ABOUT THE AUTHOR

...view details