மதுரை:வேளாங்குளம் கண்மாய் நீர் வரத்து கால்வாய்களை தூர்வாரவும், அதன் சாலையை சீரமைக்கவும் ஊரக வளர்ச்சித் துறை, வனத்துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டது. இந்த நிலையில் மதுரை ஐயர்பங்களாவைச் சேர்ந்த கோவிந்தன், உயர் நீதிமன்றம் மதுரைக் கிளைகள் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், "சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை அடுத்த சிறுகுடி ஊராட்சிக்கு உட்பட்ட வேளாங்குளம் மழையை நம்பித்தான் இப்பகுதி விவசாயிகள் உள்ளனர். இந்நிலையில் வேளாங்குளம் கண்மாய்க்கு வரும் நீர் வரத்து கால்வாய்கள் அனைத்தும் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்து உள்ளன.
இதனால், மழை நேரங்களில் தண்ணீர் இந்த கண்மாய்க்கு வருவது தடைபட்டுள்ளது. கண்மாயில் தண்ணீர் நிரம்பாததால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். அதனடிப்படையில் விவசாயிகளின் நலன் கருதியும் வேளாண்குளம் கண்மாய் மற்றும் நீர் வரத்து கால்வாய்களில் தூர்வாரி தடையின்றி நீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும்.
மேலும், பெரிய கோட்டையில் இருந்து முத்தனேந்தல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள விலக்கில் இருந்து சிறுகுடி ஊராட்சிக்கு உட்பட்ட விளாங்குளம் வழியாக வேலூர் செல்லும் சாலை மோசமான நிலையில் உள்ளது இதை சீரமைக்க பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை. எனவே, வேளாங்குளம் கண்மாய் நீர் வரத்து கால்வாய்களிலுள்ள சீமை கருவேலங்களை அகற்றியும், விளாங்குளம் வழியாக வேலூர் செல்லும் சாலையை சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.