மதுரை:சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், தந்தைப் பெரியார் திராவிடர் கழக வழக்குரைஞர் துரைசாமி என்பவர் தாக்கல் செய்த மனுவில்,' கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது.
இதை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே நடைபெற்ற ஊர்வலத்தின் போது மேடை அமைத்து பேச காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது.
இருப்பினும், ஊர்வல நிகழ்வில் கலந்து கொண்ட அப்போதைய பிஜேபி தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, காவல்துறையை கண்டித்ததுடன், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் இழிவான சொல்லை பயன்படுத்தி விமர்சித்தார்.
இதுதொடர்பாக திருமயம் காவல் நிலையத்தில் பதிவான வழக்கு, திருமயம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், திருமயம் காவல் நிலைய காவலர்கள் விசாரணையை முடித்து, ஹெச்.ராஜா மீது விரைவில் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், இரண்டு மாதத்தில் குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
ஆனால், மூன்று வருடங்களுக்கு மேலாக, காவல்துறை தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமலும், நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமலும்