மதுரை: உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஏப்ரல் 30-ந்தேதி முதல் ஜூன் மாதம் 5-ந்தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால் அவசர வழக்குகளை விசாரிப்பதற்காக வாரத்தில் இரண்டு நாள் நீதிமன்றம் செயல்படும். இதற்கான தனி நீதிபதிகளையும் பதிவாளர் அறிவித்துள்ளார்.
கோடையில் அங்கி வேண்டாம்: வழக்கறிஞர்களுக்கு மதுரை உயர் நீதிமன்றம் அனுமதி
கோடை விடுமுறையில் கோர்ட்டில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் அங்கி அணிய தேவையில்லை என உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் மதுரை கிளை கூடுதல் பதிவாளர் பூரண ஜெய ஆனந்த் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில், "சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் 5 வழக்கறிஞர் சங்கங்களின் வேண்டுகோளை ஏற்று தலைமை நீதிபதி அறிவுரைபடி கோடைகால விடுமுறை நீதிமன்றங்களில் ஆஜராகும் வழக்கறிஞர்கள்
நீதிமன்றங்களில் அங்கி அணிய தேவையில்லை. அதே நேரத்தில் அவர்கள் கருப்பு கோட்டுடன் கூடிய கழுத்து பட்டை கட்டாயம் அணிந்து ஆஜராகி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:வன்னியர் உள் இடஒதுக்கீடுக்குத் தடை கோரிய வழக்கு சென்னை உயர் நீதிமன்ற அமர்வுக்கு மாற்றம்!