தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேலூர் அருகே ஒருவர் வெட்டிக்கொலை: காவல் துறை தீவிர விசாரணை - முன்விரோதம் காரணமாக ஒருவர் கொலை

மதுரை: மேலூர் அருகே ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

police investigation
காவல்துறையினர் விசாரணை

By

Published : Feb 9, 2021, 9:40 AM IST

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டகுடி விளக்கில் அப்பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இத்தாக்குதலின்போது ராமச்சந்திரனுடன் இருந்த அவரது அண்ணன் மகனான திவாகரும் படுகாயமடைந்தார். தற்போது திவாகர் மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலூர் காவல் துணை கண்காணிப்பாளர் ரகுபதி ராஜா தலைமையிலான காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

கொலையானவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே கடந்தாண்டு முதலாக முன்விரோதம் இருந்துவந்ததாக கூறப்படும் நிலையில், இந்தச் சம்பவத்தில் அவர்களுக்கும் தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.

உயிரிழந்த ராமச்சந்திரனின் உடல் மேலூர் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

இதையும் படிங்க:குளத்தில் நீரில் மூழ்கி சகோதரர்கள் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details