மதுரை மாவட்டம், சட்டப்பேரவைத் தொகுதியில், அதிமுக வேட்பாளரான, தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் பெரிய புள்ளான் என்ற செல்வம், அழகர்கோவில் கோட்டை வாசலில் பரப்புரையைத் தொடங்கினார்.
இந்நிலையில் அவர் அப்பகுதியிலுள்ள, A.வலையப்பட்டியில் வாக்கு சேகரித்து பின் அய்யம்பட்டியில் வாக்குச் சேகரிக்க நுழைந்தபோது, அப்பகுதி மக்கள் அவரது பரப்புரை வாகனத்தை வழிமறித்தனர்.
வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏவிற்கு மக்கள் எதிர்ப்பு “கடந்த ஐந்து ஆண்டுகளாக எங்களது ஊருக்கே வராமல், தற்போது வாக்கு சேகரிக்க மட்டும் வரலாமா” என்று கூறி அவரது பரப்புரை வாகனத்தை ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினர்.
பாதுகாப்புக்காக வந்த காவல் துறையினர் பொதுமக்களை சமாதானம் செய்தனர். இருந்தபோதும் பொதுமக்கள் அனுமதிக்காததால், அந்த ஊரில் பெரிய புள்ளான் பரப்புரை மேற்கொள்ளாமலேயே திரும்பிச் சென்றார். தான் சார்ந்திருக்கும் சமுதாயத்தினரே தன்னை பரப்புரை செய்யவிடாமல், எம்எல்ஏ பெரிய புளளானை விரட்டியடித்தது, மேலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நெல்லையில் அமமுக வேட்பாளரின் வேட்புமனு தள்ளுபடி - அரசியல் சூழ்ச்சியா?