மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் முருகேசன் உட்பட ஏழு பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறையில் இருந்த 13 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ததற்கு எதிரான வழக்கில் உள்துறை அலுவலர்களை ஆவணங்களை தாக்கல் செய்யக்கோரியது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. இதையொட்டி, இன்று நடைபெற்ற விசாரணையில் சிறைத்துறை டி.ஐ.ஜி, எஸ்.பி. மற்றும் அதிகாரிகள் ஆஜராகி இருந்தனர்.
இதற்கிடையே, கொலை வழக்கில் கைதானவர்களின் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தி உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு ஒரு அரசாணை மூலம் விடுவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், சிறைத்துறை அலுவலர்கள் ஆஜராகி 13 பேர் விடுவிக்கப்பட்ட அரசாணையைத் தாக்கல் செய்தனர். இந்த அரசாணையை எதிர்த்து தாமாகவே முன்வந்து நீதிபதிகள் வைத்திய நாதன், ஆனந்த வெங்கடேஷ் அமர்வு வழக்காக எடுத்து விசாரித்தது.