மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்துவருகின்றனர். இந்நிலையில் கோயிலில் பணிபுரியும் ஊழியர்களில் சிலர் கல்விச் சான்றிதழ்களை போலியாக கொடுத்து பணியில் சேர்ந்திருப்பதாகப் புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் காமாட்சி என்ற ஊழியர் போலிச் சான்றிதழ் கொடுத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கோயிலில் பணிபுரியும் ஊழியர்களின் கல்விச் சான்றிதழ்கள் அனைத்தும் உண்மையானவையா? என்று சரிபார்ப்பதற்காக அவரவர் பயின்ற கல்வி நிலையங்களுக்கு அவை அனுப்பிவைக்கப்பட்டன. இதில் கோயிலில் சேவகராகப் பணிபுரியும் சத்தியமூர்த்தி என்ற ஊழியரின் சான்றிதழ் போலியானது என்று தெரியவந்தது. இதையடுத்து அவர் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.