தமிழ்நாடு

tamil nadu

மீனாட்சி அம்மன் கோயில் ஆனி பொன் ஊஞ்சல் உற்சவம் தொடக்கம்

By

Published : Jul 3, 2022, 9:55 PM IST

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆனி பொன் ஊஞ்சல் உற்சவம் இன்று விமரிசையாக தொடங்கியது.

ஆனி பொன்னூஞ்சல் உற்சவம் தொடக்கம்
ஆனி பொன்னூஞ்சல் உற்சவம் தொடக்கம்

மதுரை: மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் ஆனி ஊஞ்சல் உற்சவம் ஜூலை 3 முதல் ஜூலை 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. உற்சவம் நடைபெறும் நாள்களில் சாயரட்சை பூஜைக்குப் பின் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் சேர்த்தியில் இருந்து புறப்பாடாகி, சுவாமி சன்னதியில் அமைந்துள்ள 100 கால் மண்டபத்தில் உள்ள ஊஞ்சல் மண்டபத்திற்கு ஏழுந்தருள்வார்.

ஊஞ்சல் கொண்ட பின் மாணிக்கவாசகர் அருளிய திருப்பொன்னூஞ்சல் ஓதப்படும் அதன்பிறகு தீபாராதனை முடிந்து 2ஆம் பிரகாரம் சுற்றி பக்தர்களுக்கு காட்சி அளிக்கவுள்ளனர்.

ஆனி பொன்னூஞ்சல் உற்சவம் தொடக்கம்

தொடர்ந்து ஜூலை 5ஆம் தேதி ஆனி உத்திரத்தை முன்னிட்டு அன்று இரவு முதல் 6ஆம் தேதி காலை 7 மணி வரை வெள்ளியம்பல நடராஜருக்கு திருமஞ்சனம் மற்றும் கால பூஜைகள் நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:நெல்லையப்பர் கோயில் ஆனித்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ABOUT THE AUTHOR

...view details