தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நவராத்திரி சிவபூஜையில் ஜொலிக்கும் அன்னை மதுரை மீனாட்சி - Madurai District News

பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி 9ஆவது நாளில் சிவபூஜை அலங்காரத்தில் அன்னை மீனாட்சியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சிறப்பு அலங்காரம்
சிவபூஜை அலங்காரத்தில் அன்னை மீனாட்சியம்மன்.

By

Published : Oct 14, 2021, 10:03 PM IST

மதுரை:நவராத்திரியை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. நிறைவு நாளான இன்று அன்னை மீனாட்சி அம்மனுக்கு சிவபூஜை அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. நவராத்திரி விழாவின் ஒன்பதாவது நாளில் அம்மனுக்கு சிறப்புப் பூஜைகள் நடந்தன.


உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சிவபூஜையில் ஜொலிக்கும் மீனாட்சியம்மன்

கரோனா பெருந்தொற்று காரணமாக பக்தர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தாலும் கோயில் வளாகத்திற்குள் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரங்களில், அன்னை மீனாட்சியம்மன் அருள் காட்சி அளித்தார்.

மீனாட்சி சுந்தரேசுவரர்
இதற்கிடையே தமிழ்நாடு அரசு இன்று அனைத்துக் கோயில்களிலும்; எல்லா நாட்களும் திறந்து, கரோனா வழிகாட்டு நெறிமுறைகளோடு வழிபட அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால், இனிமேல் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் பக்தர்கள் மீண்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: வெள்ளி,சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபட அனுமதி

ABOUT THE AUTHOR

...view details