தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீனாட்சி அம்மன் கோயிலில் 7ஆம் நாள் நவராத்திரி விழா: பட்டாபிஷேக அலங்காரத்தில் அம்மன் தரிசனம்! - 7th day navratri function

மதுரை: மீனாட்சி அம்மன் கோயில் நவராத்திரி விழாவின் 7ஆம் நாளில் பட்டாபிஷேக அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

meenakshi_navarathiri_7thday
meenakshi_navarathiri_7thday

By

Published : Oct 23, 2020, 10:43 PM IST

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருவிழாக்களில் நவராத்திரி விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்த வகையில் நவராத்திரி விழா அக். 17 முதல் 25 வரை நடக்கிறது.

இந்நாள்களில் நடக்கும் அம்மனின் அலங்காரத்தை பக்தர்கள் தரிசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மீனாட்சி அம்மன் கோயிலில் 7ஆம் நாள் நவராத்திரி விழா

நவராத்திரி நாள்களில் தினமும் மாலை 4:00 மணி முதல் 5:30 மணி வரை, மாலை 6:45 மணி முதல் இரவு 8:00 மணி வரை பக்தர்கள் மூலஸ்தான அம்மனை தரிசிக்கலாம். மாலை 5:30 மணி முதல் 6:45 மணி வரை மூலஸ்தான சன்னதியில் திரை போட்டு அபிஷேகம், பூஜைகள் நடைபெறுகின்றன.

அச்சமயம் பக்தர்கள் கொலு மண்டபத்தில் உற்சவர் அம்மனை தரிசிக்கலாம். அம்மன் மூலவர் அலங்காரத்தை முதல் நாளில் தரிசிக்காதவர்கள் மறுநாள் காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை தரிசிக்கலாம்.

மீனாட்சி அம்மன் கோயிலில் 7ஆம் நாள் நவராத்திரி விழா

அந்த வகையில் அக்.17 நவராத்திரி முதல் நாள் அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்திலும், அக்.18ல் வாதவூர் அடிகளுக்கு உபதேசம் செய்யும் அலங்காரத்திலும், அக்.19ல் சுவாமி தன்னைத்தானே பூஜித்தல் அலங்காரத்திலும், அக்.20ல் விறகு விற்றல் அலங்காரத்திலும், அக்.21ல் கடம்பவன வாசினி அலங்காரத்திலும், அக்.22ல் வேல்வளை செண்டு கொடுத்தல் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மீனாட்சி அம்மன் கோயிலில் 7ஆம் நாள் நவராத்திரி விழா

நவராத்திரி விழாவின் 7ஆம் நாளான இன்று (அக்.23ல்) பட்டாபிஷேக அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள் காட்சி தந்தார். தொடர்ந்து அக்.24ல் மகிஷாசூரமர்த்தினி, அக்.25ல் சிவபூஜை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இதையும் படிங்க:திருமாவளவனை திமுக., காங்கிரஸ் கண்டிக்காதது ஏன்? நடிகை குஷ்பு கேள்வி

ABOUT THE AUTHOR

...view details