மதுரை:மீனாட்சி அம்மன் கோயில் வீரவசந்தராயர் மண்டப பகுதியில் கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் மண்டபம் முழுமையாக இடிந்து சேதமடைந்தது. இதனை அடுத்து கோயிலுக்குள் 2019 ஆம் ஆண்டு தற்காலிக தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டது.
இதனை அடுத்து நிரந்தர இடம் தேர்வு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. அதில் ஏற்பட்ட இழுபறி காரணமாக கட்டுமான பணியில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் மீனாட்சி அம்மன் கோயில் அருகே உள்ள வடக்கு சித்திரை வீதி மற்றும் கீழ சித்திரை வீதி சந்திப்பில் நிரந்தர தீயணைப்பு நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது.