மதுரை மாவட்டம் கருப்பாயூரணி சுற்றுவட்டாரப்பகுதியில் பெய்த மழையால் வீரபாஞ்சன் கிராம கண்மாய் நீர் நிரம்பி காணப்படுகிறது. இந்தக் கண்மாயில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, அடையாளம் தெரியாத நபர்களால் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. கொட்டப்பட்ட மருத்துவக்கழிவுகள் ஏறக்குறைய 20 டன் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
நீர் நிரம்பியுள்ள கண்மாயில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளால், இப்பகுதியில் உள்ள மக்களுக்கு நோய்த் தொற்று ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது கண்மாயில் கொட்டப்பட்ட கழிவுகளை, அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுப்பணித்துறையினர் உதவியோடு அகற்றி வருகின்றனர்.