மதுரை பாண்டிகோவில் விரகனூர் தேசிய நெடுஞ்சாலை பகுதி சாலையோரத்தில் கட்டட கழிவுகள் கொட்டும் காலி இடங்கள் உள்ளன. இந்த இடத்திற்கு அருகே மருத்துவக் கழிவுகள், இறைச்சிக்கழிவுகள் அனுமதியின்றி கொட்டப்பட்டு வருகின்றன.
அவ்வப்போது அடையாளம் தெரியாத நபர்கள் இந்த குப்பைக்கழிவுகளில் தீ வைத்து விடுவதால் புகைமூட்டம் ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இன்று (டிச.29) அதிகாலை குவிந்திருந்த மருத்துவ மற்றும் இறைச்சிக் கழிவு குப்பைகளில் சிலர் தீ வைத்ததால் அப்பகுதி புகைமண்டலமாக காட்சியளித்ததோடு, தீ பற்றி ஏரிந்தது.