தமிழ்நாடு

tamil nadu

மதுரை அரசு பள்ளி மாணவர்கள் 5 பேர் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கை

By

Published : Nov 20, 2020, 12:03 PM IST

மதுரை: சென்னையில் நடைபெற்ற மருத்துவ கலந்தாய்வில் அரசு பள்ளியைச் சேர்ந்த 5 மாணவ-மாணவியர் தேர்வு செய்யப்பட்டனர்.

மதுரை அரசு பள்ளி மாணவர்கள்
மதுரை அரசு பள்ளி மாணவர்கள்

மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் கடந்த புதன்கிழமை தொடங்கியது. இதில் முதல் மூன்று நாள்கள் அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று முன்தினம் (நவ.18) மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

தொடர்ந்து நேற்று (நவ.19) நடைபெற்ற இரண்டாம் நாள் கலந்தாய்வில் 5 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் விவரம் பின்வருமாறு;

மதுரை மாவட்டம் எழுமலை அரசு பள்ளி மாணவி பி.கார்த்திகாவிற்கு சிதம்பரம் ராஜா அண்ணாமலை மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. திருச்சி எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரியில் செக்கானூரணி அரசுப்பள்ளியைச் சேர்ந்த டீ. பிரதாப் என்ற மாணவருக்கும், கஸ்தூரிபாய் காந்தி மாநகராட்சி பெண்கள் பள்ளி மாணவி எம்.காவியாவிற்கு, கன்னியாகுமரி மூகாம்பிகை மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது.

மதுரை ஈவேரா நாகம்மையார் மாநகராட்சி பெண்கள் பள்ளியை சேர்ந்த எம் வைஷ்ணவிக்கு மதுரை சிஎஸ்ஐ பல் மருத்துவக் கல்லூரியிலும், அதே பள்ளியை சேர்ந்த மற்றொரு மாணவி பி.சினேகா மதுரை பெஸ்ட் பல் மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது.

இதையும் படிங்க:7.5% இடஒதுக்கீடு: காத்திருப்பு பட்டியலில் 180 மாணவர்கள்!

ABOUT THE AUTHOR

...view details