கடந்த சில வாரங்களாகச் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் இறைச்சி கடைகள் திறப்பதற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் தடை விதித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வாரமும் சனி ஞாயிறு கிழமைகளில் தடை தொடர்கிறது.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, "பொதுமக்கள் கூட்டம் கூடாமல் இருப்பதற்காகத் தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் பாதுகாப்பாகத் தங்குதடையின்றி கிடைப்பதற்கு மதுரை மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சில இடங்களில் சமூக இடைவெளி இல்லாமல் பொதுமக்கள் கூட்டமாக நின்று கடைகளில் பொருள்களை வாங்குகிறார்கள். அதுபோன்ற, கடைகளுக்குச் சீல் வைக்கப்படுகிறது.