புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்த பழனிவேலு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், "புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி, அரசமலை கிராம பஞ்சாயத்து ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 3,226 வாக்காளர்களில் 699 பேர் எஸ்சி எஸ்டி மற்றும் ஆதிதிராவிட பிரிவைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாடு அரசின் அரசாணையின் அடிப்படையில் எஸ்.சி, எஸ்.டி வாக்காளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தொகுதிகள், தனித்தொகுதிகளாக ஒதுக்கீடு செய்யப்பட்டன.
அதன் அடிப்படையில் அரசமலை கிராம பஞ்சாயத்து, தனி பிரிவினருக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த 15ஆம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பிலும், அரசமலை ஊராட்சி தனிப்பிரிவினருக்காகவே அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 9ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு விதிகளுக்கு எதிராக அரசமலை ஊராட்சி தனிப்பிரிவினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இது அனைவரும் தேர்தலில் போட்டியிடும் உரிமையை பறிக்கும் வகையில் உள்ளது.