நாடு முழுவதும் கரோனாவின் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், மத்திய அரசு மே 3ஆம் தேதிவரை 144 தடை உத்தரவை நீட்டித்துள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள கூலித்தொழிலாளிகள், ஏழை எளிய மக்கள், ஆதரவற்றோர்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். இதனால் சமூக செயற்பாட்டாளர்கள், தன்னார்வலர்கள் என பலர் ஏழை எளிய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.
அந்த வகையில் மதுரைக்கு அருகே உள்ள திருநகர் பகுதியைச் சோ்ந்த இளைஞர்கள் ஓன்றுகூடி மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று காலை, மதியம், இரவு ஆகிய மூன்று வேளைக்கும் சுமார் 4,500 பேருக்கு உணவு அளித்துவருகின்றனர். இரு சக்கர வாகனத்தில் ஒவ்வொரு பகுதியாக சென்று உணவு அளித்து வரும் இந்த இளைஞர்கள், திருநகர், திருப்பரங்குன்றம், தனக்கன்குளம், அரசு மருத்துவமனைகள், அனாதை ஆசிரமங்கள், முதியோர் இல்லங்கள், உள்ளிட்ட மதுரை முழுவதும் உள்ள அதரவற்றவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு முதல் தினமும் உணவளித்து வருகின்றன்ர்.